Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

SOLAR system முக்கிய ஆய்வு! போபோஸ் கிரகத்திற்கு பறந்த ராக்கெட்

SOLAR system முக்கிய ஆய்வு! போபோஸ் கிரகத்திற்கு பறந்த ராக்கெட்
செவ்வாய் கிரகத்தின் இரண்டு துணைக்கோள்களையும் ஆய்வு செய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் (ஜாக்ஸா) உருவாக்கப்பட்ட எம்.எம்.எக்ஸ். விண்கலத்தின் மாதிரி.

சுமார் ஓராண்டுப் பயணத்துக்குப் பிறகு, 2027-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபோஸில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவரும் நோக்கில் ஜப்பான் அனுப்பிய எம்.எம்.எக்ஸ். விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2031-ம் ஆண்டில் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செவ்வாயின் துணைக்கோள்கள் எவ்வாறு உருவாகின என்பதை அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.:

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, நேற்று (அக்.20) அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து எச்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலத்தை ஏவியது. ஏவப்பட்ட சுமார் 71 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம் ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது.

சுமார் ஓராண்டுப் பயணத்துக்குப் பிறகு, 2027-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், செவ்வாய் கிரகத்தின் நிலவு என்று கருதப்படும், அதன் இரண்டு துணைக்கோள்களான போபோஸ், டெய்மோஸ் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

போபோஸின் மேற்பரப்பில் தரையிறங்கி, குறைந்தது 10 கிராம் மண் மற்றும் பாறைத் துகள்களைச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் துளையிடும் கருவியும், வாயுவின் உதவியுடன் மண் துகள்களைச் சேகரிக்கும் கருவியும் பயன்படுத்தப்படும்.

போபோஸ் செவ்வாயுடன் மோதிய விண்பொருளின் சிதைவுகளால் உருவானதா அல்லது ஈர்ப்பு விசையால் சிக்கிய சிறுகோளா என்பதை அறிய இந்த மாதிரிகள் உதவும். சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்தும் இந்த ஆய்வு புதிய தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



முந்தைய செய்தி
Online retail market to cross $90 bn in 2026
அடுத்த செய்தி
டோன்போ ஐபிஓவுக்கு 135.9 மடங்கு விண்ணப்பங்கள்

தொடர்புடைய செய்திகள்